Advertisement

காலத்திற்கு ஏற்ப என்னுடைய படைப்புகளை வெளிக்கொணற முடியும்


சினிமாத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் Vino Throne


நான் பரசுராமன் வினோத் சொந்த இடம் கம்பளை ஆனால் கடந்த சில வருடங்களாக கொழும்பில்  வசித்து வருகின்றேன். ஐந்து பேரைக் கொண்ட அழகிய குட்டி குடும்பமே என்னுடையது.  எனது கல்வி பயணத்தை க/ டெல்டா கிழக்கு தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பித்தேன்.  

ஒரு விடயத்தை மக்கள் மத்தியில்  படமாகவோ காணொளியாகவோ  கொண்டு செல்லும்போது அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுவதுடன்  எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கப்படும் என்பதாலேயே இந்த துறை தெரிவு செய்தேன். இந்த பயணத்தில் வருமானங்கள் குறைவாக இருந்தாலும் என்னுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு ஆதரவினாலயே  இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கின்றேன்.


01. சினிமாவை பொறுத்தவரையில்  சகல துறையிலும் ஆர்வம் செலுத்துபவராக இருக்கின்றீர்கள்.  எந்த துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ளீர்கள் ? அதற்கான காரணம்?   

நான் படப்பிடிப்பாளராகவும் memes creator ஆகவும்  YouTuber ஆகவும்  குறும்படம் மற்றும்  திரைப்பட நடிகராகவும் வீடியோகிராபராகவும் இருக்கின்றேன். ஆனால் எனக்கு ரொம்ப பிடித்தது  videographic தான்.  ஒரு விடயத்தை மக்களுக்கு படமாக கொண்டு செல்வதை விட காணொளி வடிவில்  கொண்டு செல்லும்போது அவர்களின் உணர்ச்சிகள்  தூண்டப்படும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கப்படும் என்பதற்காக videographic பிடிக்கும்.




02. Vino Throne என்பது உங்களின் முழு பெயர் அல்ல. ஆனால் உங்களைப் பற்றி நான் தேடிய போதெல்லாம் Throne என்பது அடிக்கடி என் கண்ணில் படுகின்றது இதற்கு ஏதும் காரணங்கள் உண்டா?

              Throne என்றால்  சிம்மாசனம். என்னுடைய வேலைக்கு நானே ராஜா நானே தலைவன் என்பதற்காக என்னுடைய பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டேன். ஒரு  வேலையை ஆரம்பிப்பதற்கு  முதல் நம்பிக்கை வேண்டும். என்னால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது. அதையும் தாண்டி Vino Throne என்ற பெயரை கேட்கும் போது எனக்கு நிறைய தன்னம்பிக்கை  ஏற்படுகின்றது. அதுவே என் சாதனைகளுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக   அமைந்துள்ளது என்றும் சொல்லலாம்.  



03. Vino Throne என்றால் ஞாபகம் வருவது நெற்றியில் அணிந்திருக்கும் அந்த Black Balt  தான் இதற்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன?

எல்லோரையும் விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது தான்.  எனக்கு முடி வளர்க்க பிடிக்கும் முடி முகத்திற்கு வராமல் இருக்க தான் ஆரம்பத்தில் இந்த Black Balt அணிந்தேன். இப்போது என்னுடைய   அடையாளமாக மாறிவிட்டது.ஆகவே அதை தொடர்ந்தும்  அணிந்து வருகின்றேன்.  நான் எதிர்பாராமல் செய்த சில  விடயங்கள் தற்போது எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.



04. இந்த பயணத்தின் ஆரம்ப நாட்களையும் தற்போதைய நாட்களையும் எவ்வாறு உணர்கின்றீர்கள்?

ஆரம்பத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த சரியான தளம் கிடைக்கவில்லை. குறும்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை கூட எந்த இயக்குனரும் தரவில்லை.  ஆகவே எனக்கான களத்தை நானே அமைத்துக் கொண்டேன். கால பைரவர் எனும் குறும் படத்தை நானே தயாரித்தேன். அது பாரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை என்றாலும் நிறைய அனுபவத்தையும் சந்தோஷத்தையும் தந்தது.   என்னுடைய இந்த கலை பயணத்தின்  ஆரம்பப்புள்ளி  என்றால்  இயக்குனர் சனாதனன் அண்ணாவும் நண்பன் அகிலனும்  தான்‌.   இந்த துறையை பற்றி முழுமையாக  தெரியாவிட்டாலும்  அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய குடும்பத்தின் ஆதரவு எனக்கு  கிடைக்கின்றது.


கொழும்பிற்கு வந்த ஆரம்ப நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டேன். லாவண்யா அக்காவின் மூலம் Chris Anthony எனும் Studio வில் வேலை கிடைத்ததுடன்    The Envelope  எனும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பும் கிடைத்தது.  இதன்மூலம் இந்தியாவிற்கு சென்று   சினிமா துறை பற்றிய  பல விடயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில்  என்னால் முடியாது  என புறக்கணித்தவர்கள் இப்போது என்னை தேடி வந்து வாய்ப்புக்களை தருகின்றார்கள்  என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.



05.எவ்வகையான படப்பிடிப்பில் உங்களுக்கு  ஆர்வம் அதிகம்

  Lighting வேலைகள் அதிகமாகவும்  வித்தியாசமான கோணங்களில்  எடுக்கும் படங்கள் எனக்கு  பிடிக்கும். காதல் படங்களை விட பேய் படங்கள் மற்றும் விறு விறுப்பான படங்களை  எடுப்பதற்கு‌ ரொம்ப பிடிக்கும். என்னுடைய படப்பிடிப்பு  தனித்துமாகவும் பார்வையாளர்களுக்கு சிலிப்பூர்ட்டும்   வகையில் அமைய வேண்டும் என்பதே எனது நோக்கம்.


06. நீங்கள் ஒரு படப்பிடப்பாளராக மிகவும் கவலை அடைந்த தருணம் உண்டா?

நிறைய உண்டு. எல்லோரையும் நேர்த்தியாக படம் எடுக்கும் என்னை யாரும் படக்காத தருணத்திலும்   நிறைய குழு படங்களில் நான் இல்லாத போதும்  நிறையவே கவலை அடைந்து இருக்கின்றேன்.


07.இத்தனை வருட  பயணத்தின் உங்களின் மிகப் பெரிய சாதனை என நினைக்கும் விடயம் என்ன?

என்னுடைய படப்பிடிப்பில்  மௌனமொழி 

, பைசா போன்ற முழுநீள திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.  குறும்படங்களை தாண்டி  திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளதே  என்னுடைய இந்த குறுகிய கால பயணத்தின்  சாதனையாக கருதுகின்றேன்.


08.  காலத்திற்கேற்ப  புதிய படைப்புகளை தயாரிக்கும் போது  எவ்வாறான சவால்களுக்கு  முகங்கொடுத்து வருகின்றீர்கள்?

தொழல்நுட்ப ரீதியில் நிறைய மாற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்படுகின்றன. கற்றுக்கொண்டே தான்  இருக்க வேண்டும்.  ஒவ்வொரு  படப்பிடிப்பாளருக்கும்  சமுதாய பார்வை அவசியம்.  அப்போது தான்  எடுக்கும் படங்களும்  அதன் பிரதிபலிப்பாக அமையும். காலம்  என்றும்  நமக்காக நிற்காது   காலத்திற்கு ஏற்ப   என்னுடைய படைப்புகளை வெளிக்கொணற முடியும் என்ற முழுநம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்.



  

தகவல்  

யதுஷா ரவித்தியாகராஜா

Post a Comment

0 Comments