Advertisement

இலங்கையும் Monkeypox வைரஸ்ஸூம் முழுமையான தகவல் (விசேட நேர்காணல்)

 உலகளாவிய ரீதியில் தற்போது Monkeypox அதாவது குரங்கம்மை எனும் வைரஸ் தொற்று பரவி வருவதனால் பொது மக்கள் பாரிய அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் 23 நாடுகளுக்கு மாத்திரம் Monkeypox தொற்று பரவி இருந்த நிலையில் தற்சமயம் 75 இற்கும் அதிகமான நாடுகளில் இந்த நோய் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு குரங்கிலிருந்து பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் Monkeypox என பெயர் வர காரணம் என்றும் கூட சொல்லலாம். அத்துடன் 1970
ஆம் ஆண்டு முதலில் Monkeypox தொற்றுக்கு இலக்கான மனிதன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் ஆபிரிக்க நாடுகளில் மாத்திரம் குறித்த நோய் தொற்று பரவல் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் Monkeypox தொற்று தொடர்பான முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் அவர்களுடன் கெப்பிடல் செய்தி பிரிவு விசேட நேர்காணல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

Monkeypox தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது?

அம்மை நோயை ஏற்படுத்துகின்ற வைரஸ்ஸூம் Monkeypox யை ஏற்படுத்துகின்ற வைரஸ்ஸூம் ஒரே குடும்பத்தை சேர்ந்த வைரஸ்களில் ஒன்று. ஆனால் அம்மை நோய் சற்று பாரதூரமானது. Monkeypox அம்மை நோயிலும் விட பாரதூரமற்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் குறித்த வைரஸ் தொற்றினால் பலர் மரணித்து வருகின்றனர்.

அத்துடன் இந்த Monkeypox விலங்கிலிருந்து விலங்கிற்கும், விலங்கிலிருந்து மனிதனுக்கும், மனிதனில் இருந்து மனிதனுக்கும் பரவ கூடிய பாரிய தொற்றாக கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் அம்மை நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அம்மை நோய்க்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் குறித்த நோய் தொற்றிலிருந்து 88 சதவீதம் பாதுகாப்பை பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு Monkeypox தொற்று அழிவை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றதா?

இலங்கையை பொறுத்த வரையில் இது ஒரு புதிய வகை நோயாகத்தான் இருக்கின்றது. இருப்பினும் Monkeypox நோயுடன் ஒரு நபர் அடையாளம் காணப்படுவாராயின் அது இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பெருந் தொற்றாகத் தான் பார்க்கப்படும். அத்துடன் அண்டைய நாடான இந்தியாவில் Monkeypox தொற்றுக்கு இலக்காகி நபரொருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் குறித்த நோய் தொற்று பரவல் அடைந்து வருகின்றமையினால் இலங்கைக்கு பரவுவதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது.

Monkeypox தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது?

அதாவது குறித்த நோய் தொற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விரைவாக பரவுக்கூடும். Monkeypox தொற்றானது தொப்புள் கொடி மூலம் விரைவாக பரவும் திறன் கொண்டுள்ளது. ஆகவே கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்படுமாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

Monkeypox தொற்று இலங்கைக்கு வரமால் தடுப்பதற்காக இலங்கை சுகாதார அமைச்சகம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன?

இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு இது தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தொற்று இனங்காணப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்? தொற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன? அதுமட்டுல்லாது நோய் ஏற்பட்ட ஒரு நபருடன் எவ்வாறு பழக வேண்டும்? என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Monkeypox நோயின் அறிகுறிகள் என்ன?

Monkeypox தொற்று ஒரு நபருக்கு ஏற்பட்டால் Monkeypox என உறுதிப்படுத்துவதற்கு சராசரியாக 6 முதல் 13 நாட்கள் தேவைப்படும். எனினும் 5 தொடக்கம் 21 நாட்களில் மாறுபடலாம். பிரதான குணம் குறிகள் என்னவென்றால் ஆரம்பத்தில் உயர் காய்ச்சல் ஏற்படும். அதன் பின்னர் உடலில் பருக்கள் (ரேஸ்) தோன்றும். பிரதானமாக முகம், உள்ளங்கை மற்றும் இனப்பெருக்க தொகுதிகளில் பருக்கள் தோன்றலாம். அதுமட்டுமல்ல தலைவலி, தசைப்பிடிப்பு, மூட்டுவலி, உடற்சோர்வு போன்ற குணங்குறிகள் ஏற்படலாம். அத்துடன் சில நேரங்களில் கண்களும் பாதிக்கப்படலாம்.

நிலநீர் முடிச்சுகள் அதாவது உடலில் இருக்கும் இரத்தம் பாயும் போது தசைகளில் பிளவுகள் ஏற்பட்டு நீர் சேமிக்கப்படும். நிலநீர் முடிச்சுக்களில் Monkeypox தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்படும். பருக்கள் (ரேஸ்) தோன்றிய காலத்தில் நில நீர்கலங்களில் வீக்கம் ஏற்படுமாயின் அது Monkeypox நோய் தொற்று என உறுதிப்படுத்தலாம்.

Monkeypox நோய்க்கான பரிசோதனை எவ்வாறானவை?

Monkeypox தொற்று நோயை ஏற்படுத்தும், Orthopox வைரஸ் DNA வைரஸ் வகையைச் சார்ந்தது. கொரோனா வைரஸ் தொற்று PCR பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதை போல Monkeypox நோய் தொற்றுக்கும் PCR பரிசோதனை செய்வதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் கொரோனா தொற்றுக்கு மாதிரிகள் எடுத்தது போன்று அல்லாமல் பருக்கள் ஏற்பட்ட இடத்தில் இருந்து வடியும் திரவங்களை வைத்து PCR பரிசோதனை செய்தவதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

Monkeypox நோயிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்

உலக சுகாதார ஸ்தாபனம் இது குறித்து பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளது. முதலில் மனிதனிலிருந்து மனுதனுக்கு பரவுததை தடுக்கும் விதங்களை கையாள வேண்டும். அந்த வகையில் மனிதனில் இருந்து மனிதனுக்கு தொடுகையின் மூலமும்இ உமிழ்நீர் துளிகள் மூலமும், தொற்று ஏற்பட்டவர்களிலிருந்து வெளியேறும் திரவத்தின் மூலமும் பரவுகின்றது. இதேவேளை பாலியல் உறவின் போது தொப்பூள் கொடி மூலமும் குறித்த தொற்று பரவுகின்றது. தனித்து செயற்படுவதன் மூலமும், ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலம் குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அத்துடன் பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு கவசங்கள் என்பவற்றை கட்டாயம் அணிய வேண்டும். தொற்றாளர்களிடம் இருந்து பெறப்படும் மாதிரிகளை கவனமாகக் கையாள வேண்டும். கொரோனா தொற்றின் போது பின்பற்றிய சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டும்.

விலங்குகளில் இருந்து மனிதனுக்கு எவ்வாறு பரவுகின்றது?

மனிதனைச் சார்ந்த குரங்கினங்களின் மூலம் கூட பரவலாம். அதுமட்டுமல்லாது எலி குடும்பத்தை சேர்ந்த மூஞ்சூரு போன்ற விலங்கினங்கள் மூலமும் எல்லா வகை அணில்களினாலும் குறித்த தொற்று பரவக் கூடும்.

நாம் விலங்குகளை தொடுவதையோ, தீண்டுவதையோ முதலில் தடுக்க வேண்டும். சில வெளிநாட்டவர்கள் எலி மற்றும் அணில் வகைகளை உணவாக பயன்படுத்துகின்றனர். அதை முற்றாக தடுக்ப்பதன் மூலம் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவுவதை தடுக்க முடியும்.

விலங்கிலிருந்து விலங்கிற்கு எவ்வாறு பரவும்?

சில நாடுகளில் விலங்குகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானங்கள் பெறப்படுகின்றன. ஏற்றுமதி செய்யும் போது தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்த அவதானம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் தொற்று ஏற்பட்டுள்ள விலங்குகளை தனிமைப்படுத்துவதன் மூலம் விலங்கிலிருந்து விலங்கிற்கு பரவுவதை தடுக்க முடியும்.

Monkeypox தொற்று நோயிற்கு ஏதேனும் தடுப்பூசிகள் இருக்கின்றதா?

சின்னம்மை நோயிற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு Monkeypox நோயிலிருந்து 88 வீதமான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Monkeypox நோய் தொற்றுக்கு One vaccine (MVN – BN) எனும் தடுப்பூசியைப் பயன்படத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தள்ளது. தடுப்பூசி குறித்து இன்னும் பல்வேறு கோணங்களில் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கூட தட்டுபாடு நிலவி வருகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

ஏனைய பொருட்களுக்கு வரிசையில் காத்திருப்பதால் காலம் தாழ்த்தி கிடைக்கப் பெறும். ஆனால் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரிசையில் காத்திருக்கும் நிலைமைகள் ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும். ஆகவே வரும் காப்பதே சிறந்தது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார வழிகளை பின்பற்றியது போல Monkeypox தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதார நடவடிக்கைளை கடைப்பிடித்து நடந்துக் கொள்வதே மிகவும் சிறந்தது.

யதுஷா ரவித்தியாகராஜா

Post a Comment

0 Comments